அம்பானி வீட்டு திருமணத்தில் தடபுடலான ராஜ விருந்து – அடேங்கப்பா எத்தனை ஐட்டம்ஸ்!
Author: Rajesh28 February 2024, 7:10 pm
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.
ராதிகா மெர்ச்சந்த் பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். வருகிற மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை இந்த திருமண கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெறவுள்ளது. இத்திருமணத்தில் உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அம்பானி வீட்டு திருமணத்தில் வைக்கப்படும் ராஜ விருந்து குறித்த தகவல் ஒன்று வெளியாகி எல்லோரையும் வாயடைக்க வைத்துள்ளது. இந்தூரில் இருந்து 65 சமையல் கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டு பார்ஸி உணவு, தாய், மெக்ஸிகன், ஜப்பானிய, பான் ஏஷியா உணவுப் பொருட்கள் பரிமாறப்பட உள்ளன.
இத்திருமணத்தில் தினமும் மதியம் 225 வகையான பதார்த்தங்களும், இரவு விருந்துக்கு 275 வகையான உணவுகளும், காலை சிற்றுண்டிக்கு 75 வகையான உணவுகளும், நள்ளிரவு விருந்துக்கு 85 வகையான உணவுகளும் சமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நள்ளிரவு விருந்து உணவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை பரிமாறப்படும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பரிமாறப்பட்ட உணவு மீண்டும் வேறு நிகழ்ச்சிகளில் இடம் பெறக்கூடாது என முகேஷ் அம்பானி திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.