பணம் கொடுத்து அந்த மாதிரி செஞ்சாங்க.. விஜய் தேவரகொண்டா மீது புஷ்பா பட நடிகை குற்றச்சாட்டு ..!

Author: Vignesh
12 June 2023, 1:30 pm

தெலுங்கு திரையுலகில் இளம் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏராளமான ரசிகைகளை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. பல வெற்றி படங்களில் நடித்த இவர், நோட்டா படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தற்போது லிகர், குஷி, ஜன கன மன உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இதனிடையே, புஷ்பா’ படத்தில் சுனில் ஜோடியாக நடித்து புகழ்பெற்ற அனசுயா பரத்வாஜ், விஜய் தேவரகொண்டா மீது பரபரப்பு புகார் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

vijay devarakonda-updatenews360

அதில் அனசுயா பரத்வாஜ், தானும் விஜய் தேவரகொண்டா நல்ல நண்பர்களா தான் இருந்தோம் என்றும், அர்ஜுன் ரெட்டி படத்தில் சில தவறான வார்த்தைகளை தியேட்டரில் mute செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் தியேட்டருக்கு செல்லும் போது ரசிகர்களிடம் அந்த வார்த்தைகளைக் தெரிவித்து கொண்டே சென்றார்.

இந்த தவறான வார்த்தைகளை விஜய் தேவரகொண்டா ஊக்குவிப்பது போல் இருந்ததால், இது குறித்து விஜய் தேவரகொண்டாவிடம் தான் பேசியதாகவும், இதன் பின்னர் அவருடைய ரசிகர்களால் ட்ரோல் செய்யபட்டேன் என்று அனசுயா பரத்வாஜ் தெரிவித்தார்.

anasuya bharadwaj-updatenews360

மேலும், விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து சிலர் காசு கொடுத்து தனக்கு எதிரான கருத்துக்களை பதிவிட செய்ததாகவும், இந்த விஷயம் விஜய் தேவரகொண்டாவுக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது என்று தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!