விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வருவது தான் VJ டிடி. இவரை ரசிகர்கள் எல்லோரும் டிடி என செல்லமாக அழைப்பார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறுவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் டிடி.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் அடி எடுத்து வைத்து ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி 20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இவர் இடத்தை பிடித்திருக்கிறார் .
குறிப்பாக பிரபலங்களை வைத்து நேர்காணல் செய்யும் காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக திவ்யதர்ஷினிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உருவாக்கி விட்டார்கள். பிரபலமான தொகுப்பாளினியாக ஹீரோயின் ரேஞ்சுக்கு மார்க்கெட் பிடித்து வைத்திருக்கும் டிடி கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது திருமணம் செய்யாமல் 39 வயதாகியும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தொகுப்பாளினி டிடி படுத்த படுக்கையாக மருத்துவமனையிலிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி செய்தியை தெரிவித்து இருக்கிறார். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் முழங்காலில் ஒரு பெரிய ஆபரேஷன் செய்துக்கொண்டேன்.
நான் என்னுடைய மொத்த முழங்கால்களையும் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இது என் நாளாவது அறுவை சிகிச்சை. இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்கிறேன் என மிகுந்த வேதனையுடன் பதிவிட்டு இருக்கிறார்.
இதை அடுத்து டிடிக்கு பலரும் ஆறுதல்களை தெரிவித்து அவர் விரைவில் குணமாக வேண்டி வருகிறார்கள். முன்னதாக டிடி பல மணி நேரம் நிகழ்ச்சிகளை நின்று கொண்டே தொகுத்து வழங்கியதன் மூலம் தன்னுடைய கால் நடக்க முடியாத அளவுக்கு செயல் இழந்து போனதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0
0