அரேபிய குதிரையான ஆண்ட்ரியாவிற்கு கொரோனா POSITIVE – Latest தகவல் !

6 May 2021, 2:15 pm
Quick Share

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.
சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தன்னை தானே தனிமை படுத்திகொண்டுள்ளார். இது குறித்து, அவரது சமூக வலைதளங்களில், “எல்லோருக்கும் வணக்கம்! எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல கடமை பட்டு இருக்கிறேன், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, கடந்த வாரம் முதல் என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். இன்னும் நான் அதிலிருந்து மீண்டு வரவில்லை. இந்த மாதிரி இக்கட்டான சூழலில் நாடு சிக்கிகொண்டதால் என்ன சொல்வதென்று தெரியவில்லை, எல்லோரும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர பாதுகாப்பாக இருக்க, நான் இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

Views: - 196

0

0