“செம்ம பெருசா இருக்கே இது?” ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் !

14 January 2021, 10:41 pm
Quick Share

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. அதன்பின் பாடகியாகி நிறைய பாடல்களை பாட தொடங்கினார். கூகுள் கூகுள், உன் மேல் ஆசைதான் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். அதன் பின் மீண்டும் நடிக்கத் தொடங்கிய இவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என பல படங்களில் நடித்தார்.

மலையாளத்தில் அன்னையும் ரசூலும் என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர், எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். தற்போது பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருக்கும் ஆண்ட்ரியா, அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்திலும்,

அரண்மனை 3 படத்திலும் நடித்து வருகிறார். அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் பொங்கல் ஸ்பெஷலாக தனது நாய் குட்டியை தூக்கிவைத்து உள்ளவாறு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “செம்ம பெருசா இருக்கே இது?” என அவரது நாயை கிண்டலடித்து வருகின்றனர்.

Views: - 9

0

0