“அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை” – சர்ச்சை வீடியோ குறித்து விஸ்வாசம் அனிகா !

21 January 2021, 8:32 pm
Quick Share

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இவரின் Morphing வீடியோ கூட பயங்கர வைரலாகி வந்தது.

தற்போது அந்த வீடியோவுக்கு விளக்கமளித்திருக்கும் அனிகா, “அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், இப்படியெல்லாம் நான் பண்ண மாட்டேன், அது நன்றாக மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோ” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதனை அனைவரும் நீக்குமாறும் கூறியுள்ளார் அனிகா.

Views: - 3

0

0