பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?
Author: Udayachandran RadhaKrishnan4 April 2025, 2:36 pm
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.
இதையும் படியுங்க: மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?
இந்த நிலையில் அவர் பிரபல தொழிலதிபர் மகளை காதலிக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. விசாரித்தால் நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருவது சன் குரூப் நிறுவனமும், தொழிலதிபர் கலாநிதி மாறன் மகள் காவ்யா மாறன் குறித்து தான் பேச்சு எழுந்துள்ளது.

சன் குரூப் நிறுவனம் பல துறைகளில் உள்ளது. குறிப்பாக ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ், சன் பிக்சர்ஸ் என விளையாட்டு மற்றும் சினிமாவில் நுழைந்து கோலோச்சி வருகின்றனர்.
சமீப காலமாக சன் பிக்சர்ஸ் எடுக்கும் படத்தில் அனிருத்தான் இசையமைக்கிறார். இதனால் கலாநிதி மாறனின் குடும்ப நண்பராக அனிருத் அறியப்படுகிறார். இதனால் காவ்யா மாறன் மற்றும் அனிருத் இடையே நல்ல நட்பு உள்ளதாகவும், இருவரும் நல்ல நண்பர்கள்தான் தவிர, காதல் எல்லாம் இல்லை என கூறுகின்றனர்.
சமீப காலமாக காவ்யா மாறன், தனது சன் ரைசர்ஸ் அணிக்காக ஏலங்களில் பங்கேற்றது முதல் போட்டிகளில் இவர் செய்யும் க்யூட் மொமண்ட்டுகளுக்கும் ரசிகர்கள் ஏராளம்.
இதனால் காவ்யா மாறனுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு பக்கம் அனிருத் தனது படங்களில் பிஸியாக இருந்தாலும், சில முக்கிய நிகழ்ச்சிக்கு இசையமைப்பது உண்டு.
சமீபத்தில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் போது இவரது இசை நிகழ்ச்சிதான் நடத்தப்பட்டது.
காவ்யா மாறனுக்கும் அனிருத்துக்கும் இடையே நல்ல நட்பு உள்ளதாகவும், அதை ரசிகர்கள் தவறாக நினைத்து காதல் என டிரெண்டு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.