“ஆணவத்துல ஆடதடா” டான்ஸ் மாஸ்டருக்கு அனிதா சம்பத் கணவர் பதிலடி !

Author: Udayaraman
11 October 2020, 4:39 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘கடந்து வந்த பாதை’ என்ற அழகாச்சி டாஸ்க் கடந்த வாரம் நடந்தது. அதில் எல்லா போட்டியாளர்களும் அனைவரும் முடிந்தவரை எல்லோரையும் அழவைக்க முயற்சி செய்தனர்.

இதில், அனிதா சம்பத் கூறிய கதையை கேட்ட டான்ஸ் மாஸ்டர் சதீஷ் தனது டுவிட்டரில், “அனிதா கதையில் சோகம் ஒன்றும் இல்லை என்றும், ரொம்ப வேகமாக அனிதா பேசுகிறார் என்றும், இப்படி மூச்சுவிடாம பேசினா எல்லாரும் ஓடிடுவாங்க” என்று ஓபனாக கூறியிருந்தார்.

இதை கண்டு பொங்கி எழுந்த அனிதா சம்பத்தின் புருஷன் பிரபாகரன் தனது இன்ஸ்டாகிராமில் “ஏண்டா நீங்க பசின்னா என்னன்னு தெரியாம வளர்ந்து இருந்தா கண்டிப்பா உங்களுக்கு அடுத்தவன் பசியை தெரிய வாய்ப்பு இல்லை. இப்படித்தான் அடுத்தவன் அனுபவிச்ச பசியையும் வலியும் கூட கிண்டல் பண்ண தோணும். டான்ஸ் மாஸ்டர்ன்னா டான்ஸ் ஆடலாம், ஆணவத்துல ஆடாதிங்கடா” என்று ஆதங்கத்தை காட்டியுள்ளார்.

இதை கண்ட சதீஷ், “சோகமான கதையை மத்தவன்கிட்ட சொன்னா, சோகமாத்தான் இருக்கும்ன்னு நினைச்சா என்னத்த சொல்றது? இது சோகமான கதை நம்புங்கன்னு கணவனும் கெஞ்சினா என்ன சொல்ல? உங்க ஆட்டம் என்ன ஆட்டம்ன்னு தெரியலை. அவங்க உள்ள அழுவுறதுக்கும், நீங்க வெளிய அழுவுறதும், எப்பா சாமி, பிபி டேப்ளட் வாங்கி வச்சிக்கோங்க” என்று நக்கலடித்துள்ளார்.

Views: - 58

0

0