மலையாள மான்குட்டி.. அழகே பொறாமைப்படும் பேரழகில் அனிதா சம்பத்!

Author:
5 August 2024, 3:07 pm

செய்தி வாசிப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே ஹீரோயின் ரஞ்சிக்கு பிரபலமானவர் தான் அனிதா சம்பத். இவர் பாலிமர் தொலைக்காட்சி நியூஸ்7 தமிழன் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார்.

அழகான தோற்றமும் பவ்யமான முக ஜாடையுடன் செய்தி வாசித்து வந்த அனிதா சம்பத்திற்கு ரசிகர்கள் மளமளவென கூடி ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார். இவர் சர்க்கார், காப்பான்,தர்பார் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளினியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைத்திருந்தார்.

இதனிடையே கமல் ஹாசன் தொகுத்து வழனாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா சம்பத்திற்கு அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பொருளாதார ரீதியாகவும் வளர்ந்து விட்டார்.

தொடர்ந்து திரைப்படம் மற்றும் சீரியல்களில் தற்போது கவனத்தை செலுத்தி வரும் அனிதா சம்பத் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் தற்போது கேரள பெண் போன்று அழகாக அலங்காரம் செய்து கொண்டு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் வைத்து வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!