“கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. உங்க சூட்டுக்கு சுனாமி வந்திடபோது” – தேவதை போல இருக்கும் அஞ்சு குரியன் வெளியிட்டுள்ள புகைப்படம்
1 March 2021, 10:42 pmதமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.
மலையாளத்தில் ஓம் சாந்தி ஓசானா படத்தில் நஸ்ரியாவுடன் படிக்கும் மாணவியாக நடித்தார். தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார். தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை. இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், நடன வீடியோக்களைய பதிவேற்றி வரும் அஞ்சு குரியன், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், கடற்கரையில் நின்று கொண்டு, வெள்ளை ஆடையில் தேவதையாக தெரிகிறார் இதை பார்த்த ரசிகர்கள் “கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. உங்க சூட்டுக்கு சுனாமி வந்திடபோது” என கமெண்ட் அடித்து வருகின்றனர்
3
0