‘கிராமத்தான கோபப்பட்டு பாத்ததில்லையே….’ அட்ட்ரா… மாஸ் டயலாக்குடன் வெளியாகியது ‘அண்ணாத்த’ டீசர்!!

Author: Babu Lakshmanan
14 October 2021, 6:15 pm
annathe teaser - updatenews360
Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள‌ திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இதற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ஏற்கனவே இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து டி இமான் இசையில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் ஒரு பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்த அண்ணாத்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘கிராமத்தான குணமாத்தான பாத்திருக்க…. கோபப்பட்டு பாத்ததில்லையே’ என்ற டையலாக்குடன் டீசர் தொடங்குகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 499

16

2