அண்ணாத்த படத்தின் 3 வார வசூல் இத்தனை கோடிகளா.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவா…? ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

Author: Babu Lakshmanan
25 November 2021, 1:26 pm
Quick Share

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தின் 3வது வார வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா – ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனை படைத்துள்ளது.

தலைவரின் படத்தை அவரது ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நிலையில், அண்ணாத்த திரைப்படம் குறித்து சிலர் நெகட்டிவ் கமெண்ட்டுக்களையும் கூறி வருகின்றனர். படம் வெளியான முதல் வாரத்திலேயே 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருப்பது ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, அண்ணாத்த படம் முதல் வாரத்தில் 202.47 கோடியும், 2வது வாரத்தின் முடிவில் ரூ.225.79 கோடியையும் வசூலித்தது.

இந்த நிலையில், 3வது வாரத்திலும் தனது வசூல்வேட்டையை அண்ணாத்த தொடர்ந்துள்ளது. அதாவது, கடைசி 7 நாட்களில் மட்டும் ரூ.13.42 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் 3 வாரங்களில் மொத்தம் ரூ.239.21 கோடியை அண்ணாத்த அள்ளியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடி வசூலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வாரம் 3

நாள் 1 – ரூ.1.56 கோடி,
நாள் 2 – ரூ.1.70 கோடி,
நாள் 3 – ரூ.2.62 கோடி,
நாள் 4 – ரூ.3.54 கோடி,
நாள் 5 – ரூ.0.57 கோடி,
நாள் 6 – ரூ.0.43 கோடி,
மொத்தம் – ரூ.239.21 கோடி

எந்திரன் வசூலை கடந்து அண்ணாத்த சாதனை படைத்து வருவதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 202

0

0

Leave a Reply