விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்

Author: Prasad
17 April 2025, 2:47 pm

விஜய்க்கு ஃபத்வா…

விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் விஜய்யை பார்க்க பள்ளிவாசலில் கூடிய கூட்டத்தால் சச்சரவுகள் ஏற்பட்டன. அதில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் குடிகாரர்களும் இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. இது இஸ்லாத்துக்கு எதிரானது எனவும் பேச்சுக்கள் கிளம்பின. 

anthanan on vijay fadwa statement by muslim organization

இந்த நிலையில் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தேசிய தலைவரான சகாஃபுதின் ராஸ்வி விஜய்க்கு ஃபத்வா அறிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜய்யை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். குடிகாரர்களையும் சூதாட்டக்காரர்களையும் விஜய் இஃப்தார் நோன்பிற்கு அழைத்திருக்கிறார். அவரது திரைப்படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறார்” என அறிக்கை வெளியிட்டுள்ளார். 

விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா?

இந்த நிலையில் விஜய்க்கு ஃபத்வா அறிவித்தது குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? என கேட்டுள்ளார். இது குறித்து தனது வீடியோ ஒன்றில் பேசிய அந்தணன், “பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸில் விஜய் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரை தூக்கிட்டு வருவார். அந்த காட்சிதான் இஸ்லாமியர்களை காயப்படுத்தியிருக்கிறது. அதற்காக நீங்கள் விஜய் மீது கோபப்பட வேண்டும் என்றால் அதற்கு முன்னால் விஜயகாந்த் மீது அல்லவா நிறைய கோபப்பட்டிருக்க வேண்டும். 

anthanan on vijay fadwa statement by muslim organization

அப்படி பார்த்தால் நீங்கள் விஜயகாந்தை ஆதரித்திருக்கவே கூடாது. இதே மாதிரி பல ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவிற்கு விஜயகாந்த் எத்தனையோ முறை போயிடுக்கிறார். நீங்கள் சொல்வதை பார்க்கும்போது விஜயகாந்தை உள்ளேயே விட்டிருக்க கூடாதே. 

விஜயகாந்துடைய பெரும்பாலான படங்களில் இஸ்லாமியர்களைத்தான் தீவிரவாதியாக காட்டியிருக்கிறார். படத்தையும் நிஜ வாழ்வையும் ஒப்பிடும்போது கொஞ்சம் நமக்கு சங்கடமாக இருக்கிறது. விஜய்யை இந்த விஷயத்தில் மன்னிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து” என்று கூறியுள்ளார். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!