“சாமுத்திரிகா லட்சணம்னா இதுதான்” – அனுபமாவின் சொக்க வைக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம்

25 February 2021, 9:34 pm
Quick Share

பிரேமம் படத்தின் மூலம் அந்த படத்தில் நடித்த 3 நடிகைகளும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்கள். அதில் மேரி கதாபாத்திரத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தேன் கூடு தலை என கலாய்க்கப்பட்டு வந்தார். ஆனால் இப்போது அதுதான் அவருக்கு பயங்கர ப்ளஸ் பாயிண்ட்டாக மாறி இருக்கிறது.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனுபமா, ரசிகர் பட்டாளத்தை தனது ரியாக்சன்களால் உயர்த்தி கொண்டே செல்கிறார். தற்போது வெளியிட்டுள்ள கருப்பு வெள்ளை படத்தில், பழைய காலத்து நடிகை போல அழகு சொட்ட மின்னுகிறார். இதை பார்த்த ரசிகர்கள், “சாமுத்திரிகா லட்சணம்னா இதுதான்” என வர்ணித்து வருகின்றனர்

Views: - 1645

6

0