கொல வெறியில் “அனுஷ்கா”…மிரட்டலாக வெளிவந்த காதி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ….!

Author: Selvan
15 December 2024, 5:11 pm

ரசிகர்களை வெறித்தனமாக கவரும் ‘காதி’ கிளிம்ப்ஸ் வீடியோ

நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்து வரும் காதி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கிளிம்ப்ஸ் வீடியோவாக வெளிவந்துள்ளது.அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

Kadhi glimpse video

அதிலும் குறிப்பாக சிங்கம் படத்தில் சூர்யாக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.பின்பு பாகுபலி படத்திற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் பெரிதாக ஹிட் ஆகவில்லை.

இந்நிலையில் வானம் திரைப்படத்தை இயக்கிய “க்ரிஷ் ஜகர்லமுடி”இயக்கத்தில் காதி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் பான் இந்திய அளவில் வெளியாகிறது.

இதையும் படியுங்க: ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் பிரபல டி.ஜி.பி மகள்…டாடா இயக்குனரின் அடுத்த பட அப்டேட்..!

தற்போது,இப்படத்தின் கிளிம்ப்ஸ் விடீயோவை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியும் படக்குழு அறிவித்துள்ளது.இதில் அனுஷ்கா ஒரு மாறுபட்ட புது கெட்டப்பில் அவதாரம் எடுத்துள்ளார்,சிவப்பு நிறத்தில் சேலை உடுத்தி,கையில் அரிவாளுடன் சண்டையிட்டு,பின்பு கெத்தாக சுருட்டு புகைப்பது போல் காட்சி இடம்பெற்றிருக்கும்.

இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!