போலீஸ் பாதுகாப்புடன் கம்பீரமாக வந்த அனுஷ்கா!

30 January 2021, 5:08 pm
Anushka -Updatenews360
Quick Share

பெண் போலீசார் சார்பில் நடந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை அனுஷ்கா பலத்த பாதுகாப்புடன் போலீஸ் காரில் வருகை தந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமாகி, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வ திருமகள், தாண்டவம், லிங்கா, பாகுபலி, சைலன்ஸ் என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கைவசம் எந்தப் படமும் இல்லை. இந்த நிலையில், ஹைதராபாத்தில் பெண் போலீஸ் அதிகாரிகள் சார்பில் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் 750க்கும் அதிகமான பெண் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் போது, பெண் போலீஸ் அதிகாரிகள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நடிகை அனுஷ்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக போலீஸ் வாகனத்தில் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். மேலும் மாநாட்டிற்கு பெண் போலீசார் மத்தியில் கம்பீரமாக நடந்து வந்தார்.

அப்போது பேசிய அனுஷ்கா கூறியிருப்பதாவது: சினிமாவில் எங்களை நட்சத்திரங்களாக காட்டுகிறார்கள். ஆனால், உண்மையில், இந்த மாநாட்டில் இருக்கும் போது பெண் போலீஸ் அதிகாரிகளாகிய நீங்கள் தான் உண்மையான நட்சத்திரங்கள். உங்களது முயற்சி, உழைப்பு ஆகியவற்றின் மூலமாகவே நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். ஒவ்வொரு பெண்ணும், ஆணுக்கு இணையாக இருப்பதாக உணர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0