வீட்டுல குடியிருக்கணுமா? வேண்டாமா? குடி போதையில் ரகளையில் ஈடுபட்ட விஷ்ணு விஷால் மீது புகார்!

23 January 2021, 3:21 pm
Quick Share

குடியிருப்பு வாசிகளுக்கு தொல்லை தரும் வகையில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு விஷால் மீது அடுக்குமாடி குடியிருப்பு செக்ரடரி காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வந்த இவர் அறிமுகமான வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. இதையடுத்து அவரது நடிப்பில் வந்த படங்களுக்கு போதுமான வரவேற்பு பெறவில்லை. எனினும், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ராட்சசன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு. இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது விஷ்ணு விஷால் காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். மற்றும் இன்று நேற்று நாளை 2 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மீது சென்னை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் செக்ரடரிதான் இந்த புகார் அளித்துள்ளார்.

இது குறித்து செக்ரடரி அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: இன்று அதிகாலை அதாவது ஜனவரி 23 ஆம் தேதி அதிகாலையில் சத்தமான இசையைக் கேட்டு தான் நாங்கள் கண் விழித்தோம். பிளாட் 2ஏ மற்றும் 2பி ஆகியவற்றிலிருந்து தான் சத்தமான இசை வந்துள்ளது. இது குறித்து விஷ்ணு விஷாலிடம் தெரிவிக்க சென்றேன். ஆனால், 2ஏ மற்றும் 2பியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கதவை திறக்கவில்லை. ஆனால், சத்தம் தான் அதிகமானது.

இதையடுத்து, செக்யூரிட்டியிடம் கூறினேன். ஆனால், அப்போதும் நிறுத்தவில்லை. இதையடுத்து, 100க்கு போன் செய்தேன். அப்போது, 3ஆவது மாடியிலிருந்து வந்த குடியிருப்பாளர், தானும் அந்த சத்தத்தால் தான் கண் விழித்ததாகவும் இந்த தொல்லை தாங்க முடியாததால், 100க்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, அங்கு 2 காவலர்கள் வந்தார்கள். அவர்களுடன் நானும் மாடிக்கு சென்றேன். ஆனால், குடிபோதையில் இருந்த விஷ்ணு விஷால் தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார்.


அக்கம் பக்கத்தினருக்கு தொல்லை தரக்கூடிய இது போன்ற சம்பவங்கள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. புத்தாண்டு தினத்தன்று அவர்கள் நடத்திய பார்ட்டி குறித்து அறிந்த பிறகு அறிவிப்பை வெளியிட்டோம். அதன் பிறகு அவர்களது பார்ட்டி நிறுத்தப்பட்டது. எனக்கு 2 பேரக்குழந்தை இருக்கிறார்கள். அவர்கள் எழுப்பும் சத்தத்தாலும், வீட்டிற்கு வரும் வெளிநபர்களாலும் அடிக்கடி எனது பேரக்குழுந்தைகள் கண் விழித்துக் கொள்கிறார்கள். நானும் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.


இது போன்று அக்கம் பக்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அனைவருமே நிம்மதியுடன் வாழ விரும்புகிறோம். தெரியாதவர்கள் வீட்டிற்கு வருவதும், போவதும், குடியிருப்பு பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்கவும், இந்த புகாரின் உண்மைத் தன்மையை அறிந்தும், காவல்துறையினர் செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0