இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

Author: Prasad
16 June 2025, 12:49 pm

இந்தியாவின் முன்னணி இயக்குனர்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். தமிழில் “தீனா”, “ரமணா”,  “கஜினி”, “சர்க்கார்” போற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இதனிடையே ஹிந்தியில் ஆமிர்கானை வைத்து “கஜினி” திரைப்படத்தை ரீமேக் செய்தார். அத்திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடிக்க, அதனை தொடர்ந்து பாலிவுட்டில் “ஹாலிடே”, “அகிரா”, “சிக்கந்தர்” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ar murugadoss dance for kanimaa song in his daughter function video viral

இதனை தொடர்ந்துதான் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ஸ்ரீலட்சுமி பிரசாத் தயாரித்து வரும் நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளிவரவுள்ளது.

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா?

ஏ.ஆர்.முருகதாஸின் மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இதில் தனது மகளுடன் ஏ.ஆர்.முருகதாஸ் “ரெட்ரோ” படத்தில் இடம்பெற்ற “கனிமா” பாடலுக்கு ஜாலியாக நடனமாடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இவர் இப்படி ஜாலியாக நடனமாடி பார்த்ததே இல்லையே என ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அந்த வீடியோ இதோ…

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!