என்னோட படம் ஃப்ளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்- முருகதாஸ் ஓபன் டாக்

Author: Prasad
30 July 2025, 4:18 pm

படுதோல்வியடைந்த சிக்கந்தர்

சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி பாலிவுட்டில் வெளியான திரைப்படம் “சிக்கந்தர்”. இத்திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் ரூ.170 கோடியே வசூல் செய்திருந்தது. அந்தளவுக்கு இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் மண்ணை  கவ்வியது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ ஆர் முருகதாஸ் “சிக்கந்தர்” திரைப்படத்தின் தோல்வியை குறித்து மிகவும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டுள்ளார். 

AR Murugadoss shared the reason behind the failure of sikandar movie

தோல்விக்கு இதுதான் காரணம்?

“தமிழில் படமெடுக்கும்போது இங்கு என்ன நடக்கிறது, என்ன டிரெண்ட் இருக்கிறது என்பது நமக்கு நன்றாக தெரியும். அந்த டிரெண்டை படத்தில் வைக்கும்போது பார்வையாளர்களுக்கு நன்றாக கனெக்ட் ஆகிவிடும். இதுவே மற்ற மொழியில் படம் எடுக்கும்போது அங்கிருக்கும் இளம் ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என நமக்கு தெரியாது. வெறும் ஸ்கிரிப்ட்டையும் திரைக்கதையையும் மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. அப்படி இருக்கும்போது தமிழ் படத்தை இயக்கும்போது மட்டுமே நமது முழு யுக்தியை காட்ட முடியும். 

தெலுங்கு ஓரளவிற்கு ஓகே, கிட்டத்தட்ட நம்மை போல்தான் அவர்களும். ஆனால் ஹிந்தி சுத்தமாக எதுவும் புரியாது. நாம் ஒரு டயலாக்கை எழுதிய பிறகு அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்கள். பின் அதனை ஹிந்தியில் மொழி பெயர்ப்பார்கள். அதன் பிறகுதான் காட்சியை படமாக்குவார்கள். இதன் காரணமாக அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நம்மால் யூகிக்கதான் முடியுமே தவிர இதைத்தான் பேசுகிறார்கள் என உறுதியாக சொல்ல முடியாது. மொழி தெரியாத ஊரில் படத்தை இயக்குவது கையில்லாமல் இருப்பது போன்றதாகும்” என இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அப்பேட்டியில் பேசியுள்ளார். 

AR Murugadoss shared the reason behind the failure of sikandar movie

ஏ ஆர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!