நார்த் அமெரிக்க சுற்றுப்பயணத்தை ஒரு வருடத்துக்கு தள்ளி வைத்த இசைப்புயல்!!!

26 March 2020, 8:39 pm
Quick Share

நாடு முழுவதும் இந்த கொரோன பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது. இத்தாலியின் நிலைமையை எடுத்துரைக்க வார்த்தைகளே இல்லை. மேலும் அரசாங்கமும் இந்த பிரச்சனையை தடுக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் ஏற்கனவே தான் செல்லவிருந்த பயணங்களை ரத்து செய்து வருகிறார். உலக நாடுகளில் தனது இசை கச்சேரி நடத்தி வரும் இசை புயல் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய நார்த் அமெரிக்க சுற்றுப்பயணத்தை அடுத்த வருடம் வரைதள்ளி வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று ரசிகர்கள் ரீ டுவீட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த நேரத்தில் நாம் மீண்டும் ஒன்று இணைவோம் என்றும் அனைவரது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்வோம் என்றும் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற நாம் அனைவரும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைத்தால் இதுபோன்று எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நம்மால் எதிர்த்துப் போராட முடியும்.