அப்படி கூப்பிடாதீங்க, எனக்கு பிடிக்கல- பேட்டியில் கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மான்? என்னவா இருக்கும்!
Author: Prasad20 May 2025, 12:33 pm
பெரிய பாய்
இசைப்புயல் என்று புகழப்படும் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் இணையத்தில் அவரை செல்லமாக பெரிய பாய் என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது யுவன் ஷங்கர் ராஜாவை சின்ன பாய் என்றும் ஏ.ஆர்.ரஹ்மானை பெரிய பாய் என்றும் இணையத்தில் குறிப்பிடுவர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் பெரிய பாய் என்று அழைப்பது தனக்கு பிடிக்கவில்லை என கூறியுள்ளார்.

அப்படி கூப்பிடாதீங்க
அப்பேட்டியில் நிருபரான திவ்யதர்ஷினி, “பெரிய பாய்” என்று அவரை குறிப்பிட, அதனை கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான், “பெரிய பாயா?” என்று அதிர்ச்சியாக கேட்க, “ஆமா சார், உங்களுக்கு தெரியாதா? உங்களுடைய புனைப்பெயரே அதுதான் சார்” என டிடி கூற,
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “வேண்டாம் எனக்கு பிடிக்கவில்லை. பெரிய பாய், சின்ன பாய்னா? நான் என்ன கசாப்பு கடையா வச்சிருக்கேன். மூஞ்ச பாரு” என்று கூறினார். ஏ.ஆர்.ரஹ்மான் நகைச்சுவையாக கூறிய இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.