ஆப்ரேஷன் சிந்தூர்; ஏ.ஆர்.ரஹ்மானை சுத்து போட்ட “தேச பக்தர்கள்”- ஒரு டிவிட் போட்டது குத்தமாப்பா?

Author: Prasad
8 May 2025, 1:36 pm

ஆப்ரேசன் சிந்தூர்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் தருணத்திற்காக இந்திய இராணுவம் நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்தது. அந்த வகையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இந்திய இராணுவம் தனது அதிரடியை காட்டியது. 

ஆப்ரேசன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயல்திட்டத்தில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் குறிவைக்கப்பட்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவ படைகள் காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 

ரஹ்மான் விட்ட சமாதான புறா

இதனிடையே நேற்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெள்ளை புறா, இதயம், தேசிய கொடி ஆகிய மூன்று ஸ்டிக்கர்களை பதிவிட்டு இருந்தார். 

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த டிவிட்டை இணையத்தில் பலரும் பலவிதமாக புரிந்துகொண்டனர். வெள்ளை புறா அமைதிக்கான குறியீடு ஆகும். ஆதலால் பெரும்பாலானவர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் போரை தவிர்த்து அமைதி உண்டாகட்டும் என கூறுகிறார் என்றும் புரிந்துகொண்டனர். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் தேச பக்தர்களாக தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் சிலர்  ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த டிவிட்டை கண்டித்து வந்தனர். 

அதில் ஒருவர், “இந்த சகிப்புத்தன்மையோட உங்கள் மனைவியுடன் வாழ்ந்திருக்கலாமே” என்று கம்மெண்ட் செய்திருந்தார். இந்த Screenshot தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ar rahman tweet about operation sindoor trap in to criticism

ஏ.ஆர்.ரஹ்மான் சில மாதங்களுக்கு முன்பு மனைவியுடனான தனது பிரிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?