சாய்ரா பானு வெளியிட்ட ஆடியோ..! பிரிவிற்கு காரணம் இது தானா..?

Author: Selvan
24 November 2024, 5:17 pm

சாய்ரா பானு விளக்கம்

சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவர் மனைவி வெளியிட்ட அறிக்கை ஒட்டு மொத்த திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆக்கியது.எதற்காக இவர்கள் பிரிந்தார்கள் அதுவா இருக்குமோ,இதுவா இருக்குமோ என்று பல பத்திரிக்கை நிறுவனங்கள் கம்பி கட்டி வந்தனர்.

Saira Rahman clarification

இந்நிலையில் அவருடைய மனைவி ஒரு தனியார் ஊடகத்திற்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பிரிவதற்கான காரணத்தையும் சொல்லியிருப்பார்.

சாய்ரா பானு வேண்டுகோள்

அதில் நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். “நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதமாக எனக்கு உடல்நிலை சரியில்லை.நான் அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன்.இதன் காரணமாக தான் நான் ஏ ஆர் ரஹுமானிடன் இருந்து விலகி இருக்கிறேன்”.என்னால் அவருடைய சினிமா வாழ்க்கை பாதிப்பாகிவிடக்கூடாது.

இதையும் படியுங்க: 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”

அவர் தங்கமானவர்.இந்த உலகத்திலே அவர் தான் எனக்கு சிறந்த மனிதர்.அவரை பற்றி தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள்.அவருக்கும் என் குழந்தைகளுக்கும் என்னுடைய உடல் நிலை தொல்லை கொடுக்க கூடாது என்பதால் இந்த முடிவை நான் எடுத்தேன் என்று அந்த ஆடியோவில் கூறியிருப்பார்.சிகிச்சை முடிந்து விரைவில் சென்னை வருவேன் என்றும் கூறி இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் மகனும் சமூக வலைத்தளத்தில் அப்பாவை பற்றி அவதூறு பரப்ப வேண்டாம்,அவரை அவராக இருக்க விடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் ஏ.ஆர்.ரகுமான் பற்றி அவதூறு பரப்பும் ஊடங்கள் மீது வழக்கு தொடரப்படும் என அவருடைய வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!