“அரேபிக் குத்து” காட்டி எபெக்ட்..! சமூக வலைதளங்களில் தெறிக்கவிடும் நெட்டிசன்கள்..!

Author: Rajesh
15 February 2022, 6:07 pm
Quick Share

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Arabic Kuthu

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் பலரின் ஹலோ ட்யூன்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து யூட்யூப் ட்ரெண்டிங்கிலும் ‘அரபிக் குத்து’ முதலிடத்தில் இருந்து வருகிறது. அரபிக் குத்து பாடலில் நடிகர் விஜய் ஆடும் நடனம் ரசிகர்களது கவனத்தை பெற்று இருக்கிறது. மேலும் ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் நடனமும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் பூஜா ஹெக்டே நடுக்கடலில் அவர் ஒரு சொகுசு கப்பலில் இருந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தொடர்ந்து நெட்டிசன்கள் அரேபிக் குத்து பாடலுக்கு வௌ;வேறு ஆடியோக்களை போட்டு ரசித்து வருகின்றனர்.

Views: - 482

0

0