தீராத அரபிகுத்து பாடல் மோகம்.. செம ஆட்டம் போட்ட பி.வி.சிந்து.. வைரல் வீடியோ..!

Author: Rajesh
24 April 2022, 4:28 pm

பேட்மிண்டனில் உலக சாம்பியனான முதல் மற்றும் ஒரே இந்தியர் பி.வி சிந்து தான். அதுமட்டுமின்றி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் இரண்டாவது தடகள வீராங்கனையும் இவரே ஆவார்.

பேட்மிண்டன் களத்தில் இறங்கும் போதெல்லாம் தனது அதிரடியான ஆட்டத்தால் “எதிராளிகளை” துவம்சம் செய்யும் பி.வி சிந்து ஆடியுள்ள சமீபத்திய ஆட்டம் தான் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. 

சமீபத்தில் நடிகர் விஜய் வெளியாகிய ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு தான் பி.வி சிந்து ஆட்டம் போட்டுள்ளார். இந்த க்யூட் ஆன டான்ஸ் வீடியோ, பி.வி சிந்துவின் ரசிகர்களை மட்டுமின்றி, தமிழ் சினிமா ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளது.

  • Rajinikanth Terrorism Awareness ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க…ரஜினிகாந்தின் வைரல் வீடியோ.!