இருக்குன்னா இருக்குன்னு சொல்லு.. இல்லன்னா இல்லன்னு சொல்லு.. எதுக்கு மழுப்புற அர்ச்சனாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
13 August 2024, 10:31 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7ல் கலந்துகொண்டு டைட்டிலைட் ஜெயித்தவர் தான் அர்ச்சனா ரவிச்சந்திரன். இவர் அதற்கு பிறகு வேறு எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லை. டிமான்டி காலனி 2 படத்தில் ஒரு ரோலில் நடித்து அதன் ரிலீஸுக்காக தற்போது காத்திருக்கிறார்.

அவர் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் பிரசாத்துடன் காதலில் இருப்பதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் ஜோடியாக ட்ரிப் செல்வதாக ஆதாரத்துடன் போட்டோக்களும் வெளியாகி அதனை ரசிகர்களும் வைரல் ஆக்கினர்.

இந்நிலையில், அர்ச்சனா அளித்த ஒரு பேட்டியில், இது பற்றிய கேட்டதற்கு நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். காதல் செய்திக்கு முற்றுப்புள்ளியாக எடுத்துக்கலாமா என தொகுப்பாளர் கேட்க தயங்கியபடி, அப்படியே எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்.

அவர் காதல் இல்லை என உறுதியாக சொல்லாமல் மழுப்பளாக பேசி இருப்பதே மீண்டும் அவர் மீது கிசுகிசுக்கள் செய்யும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலரோ, ஒன்னு இருக்குன்னா இருக்குன்னு சொல்லு.. இல்லன்னா இல்லன்னு சொல்லு.. எதுக்கு மழுப்புற என அர்ச்சனாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!