ஆரி VS பாலா – ஆரிக்கு Support – ஆக நின்ற கவின் ரசிகர்கள் !

25 November 2020, 3:15 pm
Quick Share

நேற்று முன் தினம், பிக்பாஸில் ஏகப்பட்ட பட்டாசு வெடித்தது, ஆனால் பற்ற வைத்த ஆள் ஒரே ஒருவர்தான்… பாலா. பெரிய வாக்குவாதங்கள் முற்றி தெரு சண்டை போல் உருண்டுட்டு கிடந்தனர். ஆரியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்தனர். பெர்சனலாக பேசிய விஷயத்தை பொதுவெளியில் பாலா ஆரியை போட்டு கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன் பின் இதுதான் சாக்கு என ரம்யா, அர்ச்சனா, நிஷா, கேபி, அனிதா, சனம் போன்ற மற்ற போட்டியாளர்களும் அவருக்கு எதிராக நின்றனர்.

ஆனாலும் ஆரியிடம் பாலா சொன்னது ஆரி வெளியே சொல்லவில்லை. நேற்று தனி ஆளாக தவித்து போனார். எல்லோருக்கும் முன்பு ஆரியை கத்திவிட்டு, அதன் பின் ஆள் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்த ஆரியின் கால்களில் விழுந்தார் பாலா.

இந்நிலையில் ஆரிக்கு ஆதரவாக போன சீசனின் கவின் ரசிகர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். பலரும் ஆரிக்கு ஆதரவாக மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர் அவை தற்போது வைரல் ஆகி வருகின்றது.

Views: - 0

0

0