49 வயது காதலியை Breakup செய்த போனி கபூர் மகன் – பாலிவுட்டில் பரபரப்பு!

Author: Shree
21 August 2023, 7:55 am
malaaika arorA
Quick Share

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர்.

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற 20 வயது மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலைக்கா அரோரா.

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார் மலைக்கா அரோரா. தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன் கபூர் -காதலி மலாய்க்காவை பிரேக்கப் செய்துவிட்டதாக செய்திகள் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அர்ஜுன் கபூர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் மலாய்கா அரோரா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Views: - 250

0

0