நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக வெளியான அருண்விஜய்யின் அடுத்த படத்தின் Motion Poster !

14 April 2021, 9:12 pm
Quick Share

அருண் விஜய், மஹிமா நம்பியார், அரவிந்த் ஆகாஷ், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குற்றம் 23’. இந்தர் குமார் தயாரித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. ஆனால், அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களிடம் கதை சொல்லி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் அறிவழகன்.

இறுதியில், அறிவழகன் கூறிய கதையில் நடிக்க அருண் விஜய் சம்மதம் தெரிவித்து ஷூட்டிங் கூட முடிந்துவிட்டது. தற்போது, இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலின் Entrance – இல் மோஷன் போஸ்டரை ஒளிபரப்பினார்கள். இது போன்று துபாயில் Burj Khalifa கட்டடத்தில் பிரம்மாண்டமாக நடக்கும்.

அதன் பிறகு அருண் விஜய்க்கு தான் அந்த கொடுப்பினை கிடைத்துள்ளது. இந்த படத்தில் ரெஜினா, அருண் விஜயின் ஜோடியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல். மேலும் தற்போது, ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான சினம் படத்திலும், Border படத்திலும், ஹரி இயக்கும் ஒரு படத்திலும், மிஷ்கின் இயக்கத்தில் கூட ஒரு படமும் நடித்து வருகிறார் அருண் விஜய்.

Views: - 19

1

0