பாக்ஸர் படம் பற்றிய புதிய தகவல்

24 June 2020, 10:31 pm
Quick Share

ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புகழ் பெற்ற மிகவும் திறமையான நடிகர் அருண் விஜய் . மகிழ் திருமேனி இயக்கிய ‘தடம்’ படம் மூலம் உறுதியான வெற்றியை பெற்றார் ,

அதில் இரட்டை சகோதரர்களின் கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவரது ‘மாஃபியா’ எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத போதிலும் நவீன் இயக்கிய ‘அக்னி சிறகுகள் ‘, ‘சினம்’ மற்றும் ‘ஜிந்தாபாத்’ உள்ளிட்ட பல படங்கள் அடுத்ததாக வரிசையாக உள்ளன.

அருண் விஜய்யின் நிலுவையில் உள்ள படங்களில் ஒன்றான ‘பாக்ஸர்’ படத்தின் தயாரிப்பாளரான மதி நேற்று ஒரு நேர்காணலில் காணப்பட்டார். அதில் அவர் அருண் விஜய்க்கு மூன்று கெட்அப்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மீதமுள்ள பகுதிகளை எடுக்க அறுபது நாட்களுக்கு மேல் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அருண் விஜய் பாக்ஸர்’ படத்தில் தனது பாத்திரத்திற்குத் தயாராவதற்கு கடுமையாக உழைத்த போதிலும், அவர் இன்னும் முழு அளவிலான படப்பிடிப்பைத் தொடங்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை பற்றி அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரையில் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.