விஜய் சேதுபதியை தொடர்ந்து விஜய்க்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ ! செம்ம ஷாக் !
18 January 2021, 8:14 amவிஜய் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிடும். கிட்டத்தட்ட 5 வருடங்களாக இவர் நடித்த படங்கள் எல்லாமே சுமாரான படங்கள், மாஸ்டர் உட்பட.
இந்த நிலையில் அடுத்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் நான்காவது முறையாக துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் படத்தை அடுத்து இணையபோவதாக செய்திகள் வெளியாகி அந்த படத்தில் எஸ் தமனின் இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் இருக்கும் என பல தகவல்கள் வெளியாகின. ஆனால் முருகதாஸ் சொன்ன கதை அவ்வளவாக விஜய்க்கு பிடிக்கவில்லை, வேறு கதை சொன்னாலும், அதையும் பிடிக்கவில்லை என்று சொல்லி முருகதாஸ் அவரகளை அலைக்கழித்து கொண்டே இருந்தார்.
பொறுத்து பொறுத்து பார்த்த முருகதாஸ், இந்த படத்தில் இருந்து விலகலாம் என்று முடிவு செய்து, படத்தில் இருந்து வெளியேறி விட்டார், m தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் அடுத்த படத்திற்கு நெல்சன் தான் இயக்குனர் என்று சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தில் விஜய்யுடன் மோதப்போகும் வில்லன் குறித்த ஒரு தகவல் தற்போது கசிந்துள்ளது. யார் என்றால் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் அருண்விஜய் . இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும்.
0
0
1 thought on “விஜய் சேதுபதியை தொடர்ந்து விஜய்க்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ ! செம்ம ஷாக் !”
Comments are closed.