நீங்க ஒழுங்க கண்டிச்சு இருந்தா உங்க புருஷன் இப்படி பண்ணுவாரா ? சாயிஷாவை திட்டும் ரசிகர்கள்..!

By: Poorni
9 October 2020, 11:00 am
Quick Share

இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கஜினிகாந்த். இந்த படத்தில்தான் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் காதல் ஏற்பட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல், இந்தத் படம் மூலமாக ஆர்யாவுக்கும் இந்த இயக்குனருக்கும் மிக நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. அதன் காரணமாக இரண்டாம் குத்து படத்தின் டீசரை ஆர்யா வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு ஆர்யா இந்த டீசரை வெளியிட்டதன் காரணமாக ரசிகர்கள் பலர் ஒரு முன்னணி நடிகராக இருந்து கொண்டு நீங்கள் இப்படிப்பட்ட ஒரு செயலை செய்யலாமா என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இவரது மனைவியான சாயிஷா இதைப்பற்றி ஆர்யாவிடம் கேட்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் சில ரசிகர்கள் சாயிஷா ஆர்யாவை ஒழுங்காக வழிநடத்தி இருந்தால் இப்படி ஒரு சம்பவம் நேரிடுமா என பலர் கூறியது மட்டுமல்லாமல், ஆர்யாவின் மனைவி சாயிஷாவை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Views: - 47

0

0