பெண்களிடம் அத்துமீறினேனா?.. பிக்பாஸ் வீட்டில் இது தான் நடந்துச்சு.. முதன்முறையாக மனம் திறந்து பேசிய அசல் கோளார்..!

Author: Vignesh
3 November 2022, 12:00 pm

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட அசல் கோளார், தன்னைப்பற்றிய சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களிடம் தொடர்ந்து சில்மிஷ வேலைகள் செய்துவந்த அசல் கோளாரை கடந்த வாரம் வெளியேற்றினர். அவரது எலிமினேஷன் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், வெளியில் உள்ளவர்கள் அதற்கு வரவேற்பு தெரிவித்தனர். வெளியில் வந்த பின்னர் தற்போது முதன்முறையாக சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் அசல். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர் என்ன சொன்னார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

asal -updatenews360

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்கிற கேள்விக்கு பதிலளித்த அசல், “பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆனதும் எதுக்கு வெளியேற்றினார்கள் என்றே தெரியாமல் தான் வெளியே வந்தேன். இங்க வந்து சமூக வலைதளங்களை எல்லாம் பார்க்கும் போது தான் தெரிந்தது என்ன காரணம் என்று. அதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. தெரிஞ்சு அதை பண்ணல. இதுவும் கடந்து போகும்னு நம்பிக்கை இருக்கு” என கூறினார்.

அதேபோல் பிக்பாஸ் வீட்டில் தற்போதுள்ள போட்டியாளர்களில் யார் தங்களுடைய பேவரைட் என்றும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அசல், நிறைய பேர் இருப்பதாக கூறிவிட்டு அவர்களது பெயரை ஒவ்வொன்றாக கூறினார். அதன்படி மணிகண்டன், அசீம், தனலட்சுமி, ஷிவின், நிவாஷினி ஆகியோரது பெயர்களைக் கூறினார்.

asal -updatenews360

இறுதியாக பிக்பாஸ் சர்ச்சைகள் குறித்து அவர் பேசியதாவது : “நான் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் எனது குடும்பத்தினருடன் எப்படி இருப்பேனோ அப்படி தான் இருந்தேன். மீம்ஸ்களில் வருவதைப் போல் நான் தப்பான எண்ணத்துடன் நடந்துகொண்டிருந்தால் அது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கே தெரிந்திருக்கும். அப்படி தெரிஞ்சிருந்தா அவர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா.

asal -updatenews360

பிக்பாஸ் வீட்ல அவ்ளோ கேமரா இருக்கிறது. அதற்கு மத்தியில் இதுபோன்ற செயல்களில் வேண்டுமென்றே ஈடுபடுவார்களா. நான் தெரிஞ்சு செய்யாத ஒரு விஷயத்தை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது. பார்ப்பவர்களுக்கு அது தவறாக தெரிந்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பிறந்ததில் இருந்தேன் என்னுடைய குணம் அப்படித்தான். அது பிறருக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நான் மாற்றிக்கொள்ள முயல்கிறேன்” என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!