பறை வாசித்த அசோக் செல்வன்: வைரலாகும் வீடியோ!

30 January 2021, 6:38 pm
Ashok Selvan - Updatenews360
Quick Share

நடிகர் அசோக் செல்வன் பறை வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பில்லா 2 படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறது. சூது கவ்வும், தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருத்தன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்களிடையே அதிகளவில் பிரபலமானார். இதில், ரித்திகா சிங், வாணி போஜன், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ரொமாண்டிக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கணவன் – மனைவிக்குள் இடையில் நடக்கும் சம்பவங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

தற்போது மரக்கார்: அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற மலையாள படத்திலும், நின்னிலா நின்னிலா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பின் போது பறை வாசிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், படப்பிடிப்பின் போது ஒரு மூலையில் பறை ஒன்று இருப்பதைக் கண்டேன். பறை வாசிக்கும் போது உற்சாகமும், மகிழ்ச்சியையும் விவரிக்கவே முடியாது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பறை வாசிப்பது…கடைசி டச்…அதனால தவறு இருந்தால் அதனை விட்டுவிடுங்கள் ஆசானே என்று பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 27

0

0