Osaka Tamil International Film Festival: விருதுகளை அள்ளிக் குவித்த அசுரன்!

Author: Udhayakumar Raman
29 March 2021, 7:56 pm
Quick Share

ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா தமிழ் சர்வதேச திடைப்பட விழாவில் தனுஷ் நடித்த அசுரன் படத்திற்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்கு வந்த படம் அசுரன். தனுஷ் இருவேறு கதாபாத்திரங்களில் இந்தப் பட த்தில் நடித்திருந்தார். இதில், தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார். மேலும், பசுபதி, கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், சுப்பிரமணியம் சிவா, சென்றாயன், நிதிஷ் வீரா, அம்மு அபிராமி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.

சாதி மோதல், குடும்பத்து பகை, பழிக்குப் பழி, காதல் ஆகியவற்றை மையப்படுத்தி அசுரன் படம் திரைக்கு வந்தது. என்னதான், இது போன்ற கதைகள் ஏராளமாக இருந்தாலும், இயக்குநர் இந்தப் படத்தின் கதையை வெளிக்கொண்டு வந்த விதம் பார்வையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ரசிக்கும்படியாகவே இருந்துள்ளது.இவ்வளவு ஏன், இந்தப் பட த்தில் இடம்பெற்றுள்ள எள்ளுவய பூக்களயே பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையரங்கு மூலமாக மட்டுமே அசுரன் படம் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது.

இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான Behindwoods Gold Medal, Zee Cine Awards Tamil, Ananda Vikatan Cinema Awards, Norway Tamil Film Festival Awards ஆகிய விருதுகள் வெற்றிமாறனுக்கு கிடைத்தது. இதே போன்று தனுஷிற்கும் சிறந்த நடிகருக்கான விருதுகள் கிடைத்தது. இப்படி பல விருதுகளை அள்ளிக் கொடுத்த அசுரன் ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்டது. ஆம், கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.

இதில், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம் மற்றும் சிறந்த கலை இயக்குனர் ஆகிய பிரிவுகளில் அசுரன் படத்திற்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடந்த, 67ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் தனுஷின் அசுரன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும், தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. கைதி மற்றும் சில்லு கருப்பட்டி ஆகிய படங்களுக்கும் சிறந்த படங்களுக்கான ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

Views: - 99

6

0