முதல் முதலில் நயன்தாராவை பார்க்க ஆட்டோவுல தான் போனேன் – அழகான நினைவுகளை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

Author: Shree
22 April 2023, 10:16 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் சுஹாசினி மணிரத்தினம் எடுத்த நேர்காணலில் தங்களது காதல் பயணம் குறித்து சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துக்கிக்கொண்டார். அப்போது நானும் ரவுடி தான் படத்தின் கதையை சொல்ல முதன் முதலில் நயன்தாராவை பார்க்க அவரது வீட்டுக்கு ஆட்டோவில் தான் சென்றேன். பின்னர் என் வாழ்க்கை இவ்வளவு அழகாக மாறியுள்ளது. அப்போது உள்ளே அழைத்து உட்காரவைத்த நயன், எனக்கு க்ரீன் டீ கொடுத்தார். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது வேறு வழியில்லாமல் குடித்தேன். அதன் பிறகு அவர் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு கதை கேட்டார். அப்போவே எனக்கு ஓகேன்னு தோணிடுச்சு என்றார்.

https://www.youtube.com/shorts/aW7B3tjtGvs
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!