Big Boss வீட்டில், இந்த வாரம் ரெண்டு ‘குறும்படம்’ இருக்கு… யாருக்கு தெரியுமா ?

26 November 2020, 11:17 am
Quick Share

யுத்தக்களமாக மாறி இருக்கும் பிக்பாஸ் வீடு , டெய்லி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஆரி பெர்சனலாக பாலாவிடம் சொன்னதை எல்லோர் முன்பும் போட்டுக்கொடுத்து அனைவரையும் அவருக்கு எதிராக திருப்பினார்.

இதனால் நேற்று முன்தினம் புயல் அடித்து ஓய்ந்தது போல் பிக்பாஸ் வீடு இருந்தது. அதுவும் இல்லாமல் பாலாஜிக்கு அர்ச்சனா Phone பண்ணி பேசியதில் கோபமான கேப்ரியலா பாலாவை வறுத்தெடுத்து விட்டார்.

உடனடியாக உடன் போட்டியாளர்கள் அவர்களது கோபத்தை திடீரென பாலாஜி பக்கம் திருப்ப, அவர் எஸ்கேப் ஆகி சென்று விட்டார். ஆனாலும் ஆரி என்ன சொன்னாலும் குறுக்கே சண்டையில் அவர் மூக்கை நுழைத்தது குறிப்பிடத்தக்கது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா இருவரும் நிறைய மாற்றி,மாற்றி பேசி வருகிறார்கள். இந்தமுறை கண்டிப்பாக குறும்படம் போடணும் என, கமல்ஹாசனை டேக் செய்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 29

0

0