அதர்வா கெரியரில் இப்படி ஒரு படமா? திடீரென வெளிவந்த டிரெயிலரால் அரண்டுபோன ரசிகர்கள்!

Author: Prasad
11 June 2025, 12:41 pm

கெரியரில் சரிவைக் கண்ட அதர்வா

“பாணா காத்தாடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்த அதர்வா, அதனை தொடர்ந்து “முப்பொழுதும் உன் கற்பனைகள்”, “பரதேசி”, “சண்டிவீரன்” போன்ற வித்தியாசமான கதையம்சத்தில் நடித்தார். ஆனால் அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அவரது கெரியருக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இதனால் அவரது மார்க்கெட் சரிவை கண்டது.

atharvaa starring dna movie trailer launched

இந்த நிலையில் தற்போது “DNA” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அதர்வா. இத்திரைப்படத்தை “ஒரு நாள் கூத்து”, “மான்ஸ்டர்”,  “ஃபர்ஹானா” போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் வெளிவந்துள்ளது. 

அதர்வாவுக்கு கம்பேக்!

“DNA” திரைப்படம் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளதாக இத்திரைப்படத்தின் டிரெயிலரின் மூலம் தெரிய வருகிறது. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். நிமிஷாவுக்கும் அதர்வாவுக்கும் இடையே திருமணம் நடக்கும் நிலையில் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு ஏதோ அசம்பாவிதம் ஏற்பட அதனை சுற்றி என்ன நடக்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைக்கருவாக இருக்கும் என யூகிக்கமுடிகிறது. 

atharvaa starring dna movie trailer launched

மேலும் இதில் நிமிஷா சஜயனின் கதாபாத்திரம்  மனநிலை பிரச்சனையுடைய கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதில் அதர்வா, நிமிஷா சஜயன் ஆகியோருடன் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக ஜெயந்தி அம்பேத்கர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் நிச்சயம் அதர்வாவுக்கு கம்பேக் ஆக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

  • chinmayi come back to tamil cinema after 6 years ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…
  • Leave a Reply