அதுல்யா ரவிக்கு வந்த பிரச்சினை; இனி வெளிநாடு போக முடியாதா?,..

Author: Sudha
6 July 2024, 11:42 am

நடிகை அதுல்யா ரவி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். கோவை வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். ‘காதல் கண்கட்டுதே’ என்னும் ததிரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு நாடோடிகள் 2, எண்ணித் துணிக, வட்டம், கடாவர் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது ‘டீசல்’ படத்தில் நடித்து வருகிறார்.

இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் அதுல்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி தனது தோழியான சுபாஷினியுடன் இணைந்து பாஸ்போர்ட்டையும், பணத்தையும் திருடியது தெரியவந்தது.

சம்பளம் தருவது தொடர்பாக அதுல்யாவுக்கும், பணிப்பெண்ணுக்கும் ஏற்கனவே மனக்கசப்பு இருந்து வந்துள்ளது.அந்த கோபத்தில் அதுல்யா வெளிநாடு செல்வதைத் தடுக்க பாஸ்போர்ட்டை பணிப்பெண் திருடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!