என்.டி.ஆர் உடன் இயக்குனர் அட்லீ படம் இயக்க இருக்கிறாரா?

28 June 2020, 10:23 pm
Quick Share

கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீலுடன் ஒரு படம் பண்ண என்.டி.ஆர் முடிவு செய்தார், இந்த படம் பான்-இந்தியன் படமாக இருக்கும் என்றும், இது கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்படும் தெரிகிறது. இதை இந்தி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்குப் பிறகு, என்.டி.ஆர் தமிழ்-தெலுங்கு இருமொழியிலும் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என் தெரிகிறது, அவரது இந்த படத்தை அட்லீ இயக்கினால் நன்றாக இருக்கும் என்று என் டி ஆர் கருதுகிறார். அட்லீ தளபதி விஜய்யுடன் 3 பெரிய ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் அவர் இவ்வாறு நினைக்கிறார்.

இது நடந்தால் மற்ற மொழி படங்களில் நேரடியாக அட்லீயின் இயக்கமாக இது இருக்கும். அட்லீ மற்றும் என்.டி.ஆர் படங்களை பற்றி விவாதிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல் தெரிகிறது . ஆனால் இந்த படத்தை யார் தயாரிப்பார்கள் என்பது பற்றியாக அதிகார்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.