பிட்டு பிட்டா சுட்டு எடுத்த அட்லீ? ஒன்றுகூடிய திருட்டு கும்பல் – ஜவான் படத்தை டார் டாரா கிழிக்கும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
8 September 2023, 5:54 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.பிரமாண்டமாக உருவாகியுள்ள ஜவான் படம் நேற்று உலக அளவில் திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அட்லீயின் இப்படத்தையும் நெட்டிசன்ஸ் வழக்கம் போலவே ட்ரோல் செய்து வருகிறார்கள். அதன்படி ஜவான் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு படங்களில் இடப்பெற்ற காட்சிகளை பிட்டு பிட்டாக சுட்டு தான் படம் எடுத்து வைத்திருக்கிறாராம். குறிப்பாக இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸின் படத்தில் இருந்தே நிறைய காட்சிகள் சுடப்பட்டிருப்பதாக நெட்டிசன்ஸ் கண்டுபிடித்து கலாய்த்து வருகிறார்கள்.

  • retro movie first day collection report ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!