அட்லீயை அடித்து விரட்டும் பாலிவுட்? கமிட் ஆன படத்தில் இருந்து கழட்டி விட்ட சூப்பர் ஸ்டார்!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2025, 7:55 pm

இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட் சென்றார்.

அவருக்கு ஷாருக்கான் வாய்ப்பை கொடுத்தார். பாலிவுட்டில் முதல் படமான ஜவான் பயங்கர ஹிட். 1000 கோடி ரூபாய் தாண்டி வசூல் மழை பொழிந்தது.

இதையும் படியுங்க: கர்ப்பமாக இருக்கிறாரா வனிதா? ராபர்ட் மாஸ்டருடன் திருமணம்? வெளியான வீடியோ!

இதனால் பாலிவுட்டில் அட்லீ கொண்டாடப்பட்டார். உடனே தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு, தயாரிப்பை மட்டும் கவனித்தார். கீ தமிழ் படத்தை இயக்கிய காளிஸ் இந்த படத்தை இயக்கினார்.

ஆனால் தமிழில் மரண ஹிட் அடித்த தெறி படம், இந்தியில் ஓட வில்லை. வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து அட்லீ தொடர்ந்து சல்மான் கான் படத்தில் கமிட் ஆனார்.

Atlees 500 Cr Budget New Film Dropped

இதை தவிர ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாகவும், தெலுங்கி அல்லு அர்ஜூனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

500 கோடி பட்ஜெட்டில் சல்மானுடன் கூட்டணி போட்ட அட்லீ, ரஜினி அல்லது கமல்ஹாசனை கேமியோவில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்.

BOllywood Rejects Atlee

அதே சமயம் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தை நடிக்க வைக்க வைக்க அட்லீ – சல்மான் முயற்சித்துள்ளனர். இதனால் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் தயக்கம் காட்டி வருவதால், படம் டிராப் ஆனதாக கூறப்படுகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?