நீங்கள் முதலில் Shut Up பண்ணுங்க? DNA படத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறனை ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்!
Author: Prasad21 June 2025, 2:11 pm
ரசிகர்கள் வரவேற்பு
அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார். “குபேரா” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் “DNA” திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இத்திரைப்படத்தை பார்த்த பலரும் சிறப்பான கிரைம் திரில்லர் என்று பாராட்டி வருகின்றனர்.

படத்தின் கதை
குடிக்கு அடிமையாகிப்போன அதர்வாவுக்கும் இடம் பொருள் தெரியாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணமுடைய நிமிஷாவுக்கும் இடையே திருமணம் நடக்கிறது. இருவரையும் மனநோயாளிகள் போலவே அது வரை பார்த்து வந்த குடும்பத்தினர், இருவரும் இணைந்து நல்ல தம்பதிகளாக இருப்பது ஆஸ்வாசத்தை தருகிறது. ஆனால் இருவருக்கும் இடையே குழந்தை பிறக்கும்போது பிரச்சனை துவங்குகிறது. இது என்னுடைய குழந்தை இல்லை என நிமிஷா கூறுகிறார். ஆனால் யாரும் அதனை நம்பவில்லை. அதர்வாவை தவிர.
இதனை தொடர்ந்து அதர்வா தனது குழந்தையை கண்டுபிடிக்க முயல்கிறார். இந்த முயற்சியில் அவர் ஜெயித்தாரா? அவர்களின் குழந்தை நிஜமாகவே கடத்தப்பட்டுள்ளதா? என்பதுதான் மீதி கதை.
கண்டபடி விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
“DNA” திரைப்படத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “படத்தில் விறுவிறுப்பான துப்பறியும் காட்சிகள் இருந்தால்தானே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் அது எதுவும் இல்லை” என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனங்களுக்கு நெட்டிசன்கள் “இவருக்கு காசு வரவில்லை. ஆதலால்தான் இவ்வாறு நெகட்டிவாக கூறுகிறார். DNA படம் நன்றாக இருக்கிறது” எனவும், “படம் அருமையான கிரைம் திரில்லர் படம். படம் சிறப்பாகவே இருக்கிறது. இவர் பேசுவதை நம்பி படத்திற்கு போகாமல் இருந்துவிட வேண்டாம்” எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.