படம் மொத்தமாவே Wash Out! தேசிங்கு ராஜா 2 படத்தை புரட்டி போட்டு அடிக்கும் நெட்டிசன்கள்? 

Author: Prasad
11 July 2025, 4:44 pm

வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம்

2013 ஆம் ஆண்டு எஸ்.எழில் இயக்கத்தில் விமல், பிந்து மாதவி, சூரி, சிங்கம் புலி, ரவி மரியா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “தேசிங்கு ராஜா”. இத்திரைப்படத்தில் சூரியும் சிங்கம்புலியும் இணைந்து செய்யும் அட்ராசிட்டிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சூரியின் காமெடி வசனங்கள் இப்போதும் மீம் டெம்ப்ளேட்டுகளாக வலம் வருகின்றன. 

தேசிங்கு ராஜா 2

“தேசிங்கு ராஜா” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “தேசிங்கு ராஜா 2” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தையும் எஸ். எழிலே இயக்கியுள்ளார். இதில் விமலுடன் புஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா பண்டலமூரி, புகழ், ரவி மரியா, சிங்கம்புலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

audince twitter review for desingu raja 2 movie

இத்திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. புகழ், ரவி மரியா, சிங்கம்புலி ஆகியோர் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் காமெடி காட்சிகள் எதுவும் சகிக்கவே இல்லை என விமர்சனங்கள் வெளிவருகின்றன. இத்திரைப்படம் குறித்து எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் விமர்சனங்களை பார்க்கலாம்.

ஒருவர் வடிவேலு டெம்ப்ளேட் மீம் பகிர்ந்து “தேசிங்கு ராஜா 2” திரைப்படத்தை ட்ரோல் செய்துள்ளார்.

இன்னொருவர், “Wash Out” என்று மட்டும் கூறி விமர்சித்துள்ளார். 

மற்றொருவர் “மோசமான திரைப்படம்” என்ற ஒற்றை வரியில் விமர்சித்துள்ளார். 

ஒருவர், “சோலி முடிஞ்சிடுச்சு” என விமர்சனம் செய்துள்ளார். 

இவ்வாறு “தேசிங்கு ராஜா 2” திரைப்படத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!