‘என் கூட 6 மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. எங்கயோ போய்டுவ..’ பிரபல சீரியல் நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்..!

Author: Vignesh
19 October 2022, 4:30 pm

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விஷயம் பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினாலும், அது காலம்காலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது.

தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடிக்க தொடங்கி இருக்கும் லாவண்யா தானும் காஸ்டிங் கவுச் பிரச்னையை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.

மாடலிங் செய்த காலத்திலேயே நேரடியாகவே அது பற்றி கேட்பார்கள். ஒருமுறை பெண் ஒருவர் போன் செய்து அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகேவா என கேட்டார். வெளிப்படையாகவே கேளுங்கள் என சொன்னதற்கு, Physical adjustment என அவர் கூறினார்.

lavanya_updatenews360

அதன் பின் ஒருமுறை ஒரு casting director ‘ஆறு மாதம் மட்டும் என்னுடன் இரு. எங்கயோ போய்டுவ’ என ஓப்பனாகவே லிவின் பற்றி கேட்டார். சில நடிகைகள் பெயரை கூறி அவர்கள் தற்போது கார், வீடு என பெரிய அளவில் இருப்பது பற்றி கூறினார்.

நான் இந்த துறைக்கு புதிது என்பதால் அது பற்றி எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என லாவண்யா கூறி இருக்கிறார்.

lavanya_updatenews360
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!