குடும்பத்தோடு விருது வாங்கிய பாபா பாஸ்கர் மாஸ்டர்: வைரலாகும் புகைப்படம்!

7 March 2021, 10:40 pm
Quick Share


குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாபா பாஸ்கர் மாஸ்டர் Behindwoods சார்பில் Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர். திருவிளையாடல் ஆரம்பம், மாரி, வில்லு, படிக்காதவன், மலைக்கோட்டை என்று ஏராளமான படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும், நடிகராகவும் திகழ்ந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் பாபா பாஸ்கர் பணியாற்றியுள்ளார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2ஆவது சீசனில் ஒரு குக்காக கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், பாலாவுக்கு சித்தப்புவாக பாபா பாஸ்கர் செய்து வரும் அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதோடு, மாரி பாடல் போடப்படும் போது அருகில் இருப்பவர்களை அலேக்காக தூக்கி வெளியில் விட்டு விட்டு வருகிறார். இதுவரை புகழ், அஸ்வின், மதுரை முத்து, பாலா, சுனிதா என்று பலரையும் அலேக்காக தூக்கியுள்ளார்.


இந்த நிலையில், Behindwoods Gold Icons என்ற தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், தொலைக்காட்சியில் மிகவும் நம்பிக்கைக்குரிய காமெடியன் என்பதற்கான Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை நடன இயக்குநரும் குக் வித் கோமாளி 2ஆவது சீசன் நிகழ்ச்சியின் குக்குமான பாபா பாஸ்கர் வழங்கியுள்ளார். அப்போது, பாலாவை ஒரே தூக்காக அலேக்காக தூக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதைத் தொடர்ந்து, பாபா பாஸ்கருக்கும் Behindwoods Gold Icons சிறந்த பெர்பார்மர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவரது அம்மா, மகள் மற்றும் மகன் ஆகியோரை வாங்குமாறு செய்துள்ளார். குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் தான் செய்யும் ஒவ்வொரு சமையலும் தனது அம்மாவின் மூலமாக கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்ச்சிக்கு வருவதற்கு தனது மகள் தான் காரணம் என்று பாபா பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6037

4

0