செல்போன் கேமராவில் ‘அயன்’ ரீமேக்: எந்த வித்தியாசமும் இல்ல…Loved this என சூர்யா ட்வீட்..!!

Author: Aarthi
28 July 2021, 12:57 pm
Quick Share

திருவனந்தபுரம்; அயன் படத்தில் இடம்பெற்றிருக்கும் சண்டைக் காட்சியை தத்ரூபமாக ரீமேக் செய்த ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் அயன். இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகின்றன. இந்தப் படத்தில் சூர்யா, தமன்னா, பிரபு, ஜெகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் சூர்யாவின் முதல் பாடல் ‘பளபளக்குற பகலா நீ’ என்கிற பாடல் இந்த பாடலை திருவனந்தபுரத்தில் இருக்கும் சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் பிறந்த நாளையொட்டி, தற்போது மறுஉருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ‘அயன்’ படத்தில் வரும் இந்த பளபளக்குற பகலா நீ பாடலின் ஒவ்வொரு காட்சியையும் அதே கேமரா கோணத்தில் செல்போனில் கச்சிதமாக படமாக்கியிருக்கின்றனர் அந்த இளைஞர்கள்.

பெரிய அளவில் தொழில்நுட்ப உதவிகள் இன்றி மிகவும் எளிமையாக, அதே சமயம் அப்படியே அயன் பட பாடலை கண்முன்னே கொண்டு வந்த இந்த இளைஞர்களின் திறமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதுகுறித்து இந்த வீடியோவை பார்த்துவிட்டு நடிகர் சூர்யாவும் தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் குறிப்பிடும்போது, ”ட்ராலி.. ஜிம்மி.. முதலிய உதவி தொழில்நுட்பங்கள் இன்றி அயன் படத்தின் அந்த பாடலை அற்புதமாக ரீ கிரியேட் செய்து இருக்கிறீர்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. அயன் படக்குழுவினர் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து மகிழ்வார்கள்.

குறிப்பாக கே.வி.ஆனந்த் சார் இந்த வீடியோவை பார்த்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். ஒரு passionம் பேரன்பும் இருந்தால் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ அதை செய்ய முடியும் என காட்டியிருக்கிறீர்கள். திருவனந்தபுர ரசிகர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 427

3

1