அந்த ஆளு ஒரு விஷம்… மோசமான உறவு குறித்து பாக்யலட்சுமி சீரியல் இனியா வருத்தம்..!

Author: Vignesh
27 March 2024, 12:49 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் த்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi - updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

neha iniya

இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மகளாக நடித்துவரும் இனியா எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு, ஐயோ நான் வளந்துட்டேன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் இப்படி ஒரு கேள்வி கேட்டதில்லை. அதனால், எனக்கு 22 வயசுதான் ஆகுது எனக்கு தெரியவில்லை.

neha iniya

18 வயதில், நான் நினைத்தேன் 23 வயதில் கல்யாணம் 25 வயதில் குழந்தை என்று ஆசை இருந்தது. இப்போது, இல்லை எதுவும் ஆகவில்லை என்று கூறி இருக்கிறார். நான் காதலிக்கவில்லை யாருன்னா இருந்தா சொல்லுங்க.. காதல் இதற்கு முன் இருந்திருக்கு இல்லை என்று சொன்னால் கமெண்ட்ல கண்டிப்பா திட்டுவாங்க, ஆனால் மிகவும் மோசமான காதல் தான் அது. அந்த ஆளு ஒரு விஷம், 22 வயசுல கூட ரிலேஷன்ஷிப்ல இல்லாம யாராவது இருப்பாங்களா இப்போது இல்லை நான் யாருக்காகவும் இப்போது காதல் ஸ்டேட்டஸ் போடுவதில்லை. சில வீடியோக்கள் பார்க்கும்போது நம் வாழ்க்கைக்கு ஒத்துபோகும் அப்படி தான் அதை பகிர்வேன் என்று நேஷா கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நோட்டாவுக்கு ஓட்டு போடாதீங்க… 5 வருட ஆட்சி.. 5 நிமிடம் யோசித்து வாக்களியுங்கள் : விஜய் ஆண்டனி வேண்டுகோள்!

  • Trisha at Marudhamalai Temple Viral Video பக்தி பரவசத்தில் நடிகை த்ரிஷா…கோவை மருதமலையில் சிறப்பு வரவேற்பு…!
  • Views: - 333

    0

    0