கோபியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கும் ரஞ்சித்.. பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்களின் சம்பள விவரம்..!

Author: Vignesh
8 July 2023, 11:30 am

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.

bhagyalakshmi -updatenews360 2

இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் நடிகர் நடிகைகளின் சம்பளம் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்த ரஞ்சித்துக்கு எல்லோரையும் விட அதிக சம்பளம் வழங்கப்படுகிறதாம்.

bhagyalakshmi -updatenews360 2

சுசித்ரா ஒரு நாள் சூட்டிங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷுக்கு 12,000 ரேஷ்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகாவிற்கு 12,000 சம்பளமும் தரப்பட்டு வருகிறதாம்.

bhagyalakshmi -updatenews360 2

மேலும் எழில் ரோலில் நடிக்கும் விஷாலுக்கு பத்தாயிரம் ரூபாயும், ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேஷுக்கு பத்தாயிரம் ரூபாயும், செழியனுக்கு பத்தாயிரம் ரூபாயும் இனியாவிற்கு 8000 ரூபாயும் ஒரு நாளுக்கு தரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

bhagyalakshmi -updatenews360 2
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!