புதிய கெட்டப்பில் பாக்கியலட்சுமி சீரியல் கோபி.. ஒருவேளை அப்படி இருக்குமோ?

Author: Vignesh
1 November 2023, 5:19 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.

baakiyalakshmi gopi- updatenews360

சமீபத்திய எபிசோடுகளில் அடுத்தடுத்து பெரிய இடியாய் இறங்கியுள்ளது. அதாவது, அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வந்திருக்கிறார். நிலாவையும் அமிர்தாவையும் என்னுடன் அனுப்புங்கள் என்று அவர் ஒரு பக்கம், செழியன் மாலினியிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் பிரச்சினை இன்னொரு பக்கம். இதில், ராதிகாவால் கேண்டீன் போய் உள்ளது. இப்போது, வேலைக்காக பாக்கியா அழைந்து வருகிறார். இப்படி எல்லா பக்கமும் விறுவிறுப்பின் உச்சமாக கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இந்த கதைக்களம் எப்படி மாறும் பாக்கிய எப்படி சமாளிக்க போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

sathish Gopi-updatenews360

கதையில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் பாக்கியா வீட்டில் புதிய கெட்டப்பில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது தந்தை ராமமூர்த்தி போல் கெட்டப் போட்டு நானும் தாத்தா தானே என பதிவு செய்துள்ளார்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?